47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பொறுப்பைத் தட்டி கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

அமெரிக்க அரசியல்வாதிகளின் பொறுப்பைத் தட்டி கழிக்கும் செயல்களை பன்னாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

News image
Updated On :26 ஜூன் 2020, 12:06 pm

DIN

அமெரிக்க அரசியல்வாதிகளின் பொறுப்பைத் தட்டி கழிக்கும் செயல்களை பன்னாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அமெரிக்க அரசியல்வாதிகள் இன்னும் அவ்வாறே செயல்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசு புதிய உயர் நிலையில் தமது பொறுப்பைத் தட்டி கழிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் எனும் செய்தித்தாள் கடந்த சில நாட்களாக வெளியிட்ட பல கட்டுரைகளில் குற்றஞ்சாட்டியது. ஆதரவு விகிதம் சரிவை எதிர்நோக்கி உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் தொடர்ந்து அதிகாரம் செலுத்த முயலும் அமெரிக்க அரசியல்வாதிகள், அதற்கு எந்த வழிமுறையும் இல்லை என்பதால் கவலைப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டி கழிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, அண்மையில் ஒக்லஹோமா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீது பொறுப்பு விலக்கு அறிக்கையில் கையொப்பம் பெற்றுக் கொண்டது. இவ்வறிக்கையின்படி, கூட்டத்தில் கலந்து கொள்வதனால் புதிய ரக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், தேர்தல் குழு அல்லது இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் தரப்புக்கு மேல்முறையீடு செய்ய கூடாது என அவர்களிடம் எழுதி வாங்கப்பட்டது.

தேர்தல் பரப்புரை கூட்டம் பெருமளவில் வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறக்கூடும் என்று அமெரிக்காவின் புரான் பல்கலைக்கழகத்தின் மருத்துவயியல் நிபுணர் மேகன் ரேன்னி எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க அரசியல்வாதிகள் நோய் தடுப்பில் ஈடுபடாமல் அரசியல் நோக்குடன் செயல்படுவதால், மேலதிக அமெரிக்க மக்கள் தங்கள் உயிரை விலையாக கொடுக்க வேண்டியதானது.

அமெரிக்க அரசு நோய் தடுப்புக்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கையைத் தொடர்ந்து கைவிட்டால், கற்பனை செய்ய முடியாத துன்பத்தை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்று தி அட்லாண்டிக் எனும் மாத இதழில் அண்மையில் வெளியான கட்டுரையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடக குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.