47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீனாவின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள்

ஜூன் 26ஆம் தேதி 33ஆவது போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாகும். 

News image
Updated On :26 ஜூன் 2020, 11:31 am

DIN

ஜூன் 26ஆம் தேதி 33ஆவது போதைப் பொருட்கள் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாளாகும். 

2020 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மே திங்கள் வரை, போதைப் பொருட்கள் தொடர்புடைய 829 வழக்குகளைக் குடியேறுவோருக்கான சீன நிர்வாக நிறுவனங்கள் துப்புத்துலக்கி, 4792 கிலோகிராம் எடையுள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளன.

மேகோங் ஆற்றுப்பகுதியில் சீனா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து ஆகிய 4 நாடுகளின் 94ஆவது கூட்டுக் கண்காணிப்பு நடவடிக்கை அண்மையில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 4 தரப்புகளும் கூட்டாக  7 வழக்குகளைத் துப்புத்துலக்கி, 4585.39 கிலோகிராம் எடையுள்ள போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, ஐயத்துக்குரிய 9 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளன.

மேலும், சீனாவின் பல்வேறு இடங்களில், போதைப் பொருட்கள் எதிர்ப்புக்கான பல்வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போதைப் பொருள் எதிர்ப்பு பற்றிய பொதுமக்களின் கருத்துக்களையும் அறிவினையும் இந்நிகழ்ச்சிகள் வலுப்படுத்தியுள்ளன.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.