பெய்ஜிங்கில் சேவைத் துறையில் ஈடுபடும் 11,80,000 நபர்களுக்கு நியூக்ளிக் அமிலச் சோதனை

சின்ஃபாதி சந்தையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பெய்ஜிங்கில் உள்ள காய்கறிச் சந்தைகள்,
பெய்ஜிங்கில் சேவைத் துறையில் ஈடுபடும் 11,80,000 நபர்களுக்கு நியூக்ளிக் அமிலச் சோதனை

சின்ஃபாதி சந்தையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பெய்ஜிங்கில் உள்ள காய்கறிச் சந்தைகள், உணவகங்கள், கடைகள் மற்றும் பேரங்காடிகள், உணவெடுத்துச் செல்லும் சேவை, தூதஞ்சல் சேவை, சிகையலங்காரக் கடை முதலியவற்றில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களிடையிலும் நியூக்ளிக் அமிலச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது வரை 11 இலட்சத்து 80 ஆயிரம் நபர்களிடம் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பெய்ஜிங் சந்தை ஒழுங்குமுறைப் பணியகத்தின்  துணைத்தலைவர் சென் யன்காய், கொவைட்-19 நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பற்றி பெய்ஜிங் மாநகர அரசு 29ஆம் நாள் பிற்பகல் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com