டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சீனாவில் கரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 27 பேர் பலி

சீனாவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :8 மார்ச் 2020, 3:36 am

DIN

சீனாவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர். 

சீனாவில் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய புதிய வகை கரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, ரஷியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 94 நாடுகளுக்குப் பரவியுள்ளது.கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1 லட்சத்தைத் தாண்டியது.

சனிக்கிழமை நிலவரப்படி, அந்த வைரஸ் 1.02 லட்சம் பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸுக்கு சீனாவில் நேற்று மட்டும் 27 பலியாகி உள்ளனர். இத்துடன் அந்த வைரஸுக்கு சீனாவில் பலியானவா்களின் எண்ணிக்கை 3,070-லிருந்து 3,097-ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் அந்த நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651-லிருந்து 80,696-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சீனாவைத் தவிர்த்து சர்வதேச அளவில் கரோனா வைரஸுக்கு 413 பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.