சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

சீனாவில் நேற்று கரோனாவுக்கு 14 பேர் பலி; 2,975 பேர் கவலைக்கிடம்

சீனாவில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது. இதன் மூலம் சீனாவில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2020, 5:47 am

PTI


பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக இருந்தது. இதன் மூலம் சீனாவில் மட்டும் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,213 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை சீனாவின் தேசிய நல்வாழ்வுத் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 16 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 80,860 ஆக உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை முதல் பெய்ஜிங்கில் உள்ள வெளிநாட்டு பயணிகள் அனைவரையும், தங்கள் இருப்பிடங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது சீனாவில் கரோனா பாதித்து 2,975 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.