கரோனா தடுப்பு மருந்தை பரிசோதிக்க தொடங்கிய அமெரிக்கா
கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியது.


கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா தொடங்கியது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 115 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்காவின் தேசிய சுகாதாரத்துறை நிறுவனம் நேற்று தொடங்கியது. வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகரில் முதல் முறையாக 43வயதான ஜெனிஃபர் ஹெலர் என்ற பெண்ணுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
ஜெனிஃபரை தொடர்ந்து 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. 45 பேரிடமும் மொத்தம் 6 வாரங்கள் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...