ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனாவுக்கு 913 பேர் பலி
ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனாவுக்கு 913 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனாவுக்கு 913 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் முதலில் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, உலகின் 200 நாடுகளில் பரவியுள்ளது. இதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அந்த வைரஸால் இதுவரை 785,807 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 37,820 பலியாகினா். கரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரே நாளில் புதிதாக 19,988 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இத்துடன் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164,253ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பலியானவர்களின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனாவுக்கு 913 பேர் பலியாகியுள்ளனர்.
இத்துடன் அங்கு பலி எண்ணிக்கை 7,716 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் ஸ்பெயினில் அந்த வைரஸால் இதுவரை 87,956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...