

லாகூர்: பாகிஸ்தானில் முதல்முறையாக விமானப் படைக்கு ஒரு இந்து விமானியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தார்பார்கார் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் தேவ் என்ற இளைஞர் பாகிஸ்தானின் முதல் இந்து விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் அனைத்து இந்து பஞ்சாயத்துச் செயலாளர் ரவி தவானி கூறுகையில்,
முதன் முறையாக பாகிஸ்தான் விமானப் படைக்கு ராகுல் தேவ் விமானியாக தேர்வு செய்யப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பலர் சிவில் சேவை, இராணுவம் மற்றும் மருத்துவத்துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மத பாகுபாடு பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய ரேஞ்சர் அமர்ஜீத் சிங், முதல் முறையாக வாகா எல்லையில் நடந்த பாரம்பரிய விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.