திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அனைத்து ஊழியர்களுக்கும் மே 22 'கரோனா விடுமுறை': கூகுள் அறிவிப்பு

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 22 -ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது கூகுள்.

News image
google071343
Updated On :11 மே 2020, 7:39 am

DIN

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மே 22-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது கூகுள்.

கரோனா தொற்று காரணமாக ஒட்டுமொத்த உலகமும் கடும் சிரமங்களை சந்தித்து வருகிறது. பல தொழில்கள் முடங்கியுள்ளன. ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள், பலரும் வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத நிலையில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கரோனா தொற்றில் இருந்து காத்துக் கொள்ளும் வகையில், பெரும்பாலான ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற ஒப்புக் கொண்ட மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் விளங்குகிறது. 

தற்போது, கூகுள் தனது கொள்கையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, தனது ஊழியர்கள் டிசம்பர் 2020 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், எந்த ஊழியரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்படாது, அதிக அவசியம் இருப்பவர்கள் மட்டும் ஜூன் அல்லது ஜூலையில் அலுவலகம் வந்து பணியாற்றலாம், அதில்லாமல், புதிய கொள்கையின்படி, 2020 மே 22-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்ஃபாபெட்-டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் கூகுள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது. இதனை கரோனா விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.