சீனாவின் ஹுநான் மாநிலத்தில் மியெள இனத் தனிச்சிறப்புடைய வெள்ளி அலங்காரத் தயாரிப்புத் தொழில் மையத்தைச் சேர்ந்த கலை வாரிசு ஜியாங் ஹுவா. குவெய்சோ மாநிலத்தில் இருந்து வந்த இவர், 2006ஆம் ஆண்டு முதல் வெள்ளி அலங்காரத் தயாரிப்பைக் கற்றுகொள்ள தொடங்கினார்.
தற்போது, சிறந்த தயாரிப்புத் தொழில் திறனைக் கற்றுக் கொண்டுள்ள அவருக்கு, வெள்ளி அலங்காரத் தயாரிப்பு மூலம் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் யுவான் வருமானம் கிடைக்கிறது.
மியெள இனத்தின் வெள்ளி அலங்காரத் தயாரிப்புத் தொழில் திறன், தேசிய நிலை பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்