சமையல் செய்து அசத்தும் ஒரு வயது குழந்தை; இன்ஸ்டாகிராமில் 15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்
'கோபே ஈட்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில், ஒரு வயது குழந்தையின் சமையல் விடியோக்கள் வைரலாகி வருகின்றன.


'கோபே ஈட்ஸ்' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில், ஒரு வயது குழந்தையின் சமையல் விடியோக்கள் வைரலாகி வருகின்றன. குழந்தை கோபே-இன் பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் ஆஷ்லே மற்றும் கைல் இணைந்து இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியுள்ளனர்.
இதில் குழந்தை பல்வேறு வித உணவுகளை சமைக்கிறான். குழந்தை சமைப்பதற்கு ஆஷ்லே உதவி செய்கிறார். கடந்த பிப்ரவரி முதல் பல விடியோக்கள் பதிவிடப்பட்டு வரும் நிலையில் ஒரு சில மாதங்களிலேயே கோபே-வை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியான விடீயோக்கள் மூலமாக பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஒரு வயது குழந்தை குறும்புத்தனத்துடன் சமையல் செய்யும் விடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். குழந்தையின் நடவடிக்கைகள் தங்களை உற்சாகப்படுத்துவதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...