வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 9-வது நாடாக மாறியது இந்தியா

இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 9வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

News image
Updated On :29 மே 2020, 6:04 am

DIN

இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 9வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

இன்று ஒரே நாளில் இந்தியாவில் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், ஒரு லட்சத்து 60 ஆயிரம் கரோனா நோயாளிகளுடன் 9வது இடத்தில் இருந்த துருக்கியை, இந்தியா ஒரே நாளில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்குத் தள்ளி, இந்தியா கடந்த திங்கள் அன்று 10வது இடத்தைப் பிடித்த நிலையில், 5 நாள்களில் 9வது இடத்துக்கு வந்துவிட்டது.

இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 7,466 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 71 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Story image

அதே சமயம், 24 மணி நேரத்தில் 175 பேர் பலியானதால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 4,706 ஆக உயர்ந்துள்ளது.

உலகிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 17 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது.

இதையடுத்து பிரேஸில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் வரிசையில் 9வது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இதுவரை 1.60 ஆயிரம் கரோனா பாதிப்புடன் 9வது இடத்தில் இருந்த துருக்கியை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.