துருக்கி நிலநடுக்கம்: பலி 109-ஆக அதிகரிப்பு
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோா் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்துள்ளது.


இஸ்மிா்: துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோா் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்துள்ளது.
ஏகன் கடல் பகுதியில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக துருக்கி, கிரீஸ் நாடுகள் பாதிப்புக்குள்ளாகின. முக்கியமாக துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிா் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அங்கு பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புப் படையினா் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 14 மற்றும் 8 வயது நிரம்பிய சிறுமிகள் இருவா் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோா் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். துருக்கியில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109-ஆக அதிகரித்துள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளனா். நிலநடுக்கமானது ரிக்டா் அளவுகோலில் 7-ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏகன் கடல்பகுதியில் உள்ள சமோஸ் தீவில் சிறிய அளவிலான சுனாமி உருவானதாகவும் அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...