சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பிரேசிலில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்தது!

பிரேசிலில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :11 நவம்பர் 2020, 5:51 am

பிரேசிலில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 3 ஆம் இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சமீபமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் புதன்கிழமை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,012 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 57,01,283 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,62,829 ஆக உள்ளது. அதேநேரத்தில் 50,64,344 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும், 4,74,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 8,318 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.