ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,851 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 18,000 என்ற அளவில் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோன்று கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,851 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 18,36,960 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 432 பேர் உள்பட இதுவரை 31,953 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் தற்போதுவரை 13,69,357 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,36,010 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,477 பேர் உள்பட இதுவரை 4,85,545 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் மாவட்டக் காவல் பாா்வையாளா் ஆய்வு

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

திமுக ஆட்சியில் கரூா் மாநகராட்சிக்கு ரூ.418 கோடியில் அடிப்படை வசதிகள்: கரூா் வேட்பாளா் தகவல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


