மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அமெரிக்க அதிபராகத் தேர்வான ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு ஒரு வார காலத்திற்கு பின் சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

News image
அமெரிக்க அதிபராகத் தேர்வான ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து
Updated On :13 நவம்பர் 2020, 9:30 am

DIN

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு ஒரு வார காலத்திற்கு பின் சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டிரம்பை வீழ்த்தி ஜோ பைடன் புதிய அதிபராகத் தேர்வானார். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த டிரம்ப் பைடனின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு சீன அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.

"அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம்.பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.