கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முதல்முறையாக ஆப்கன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றடைந்தார்.

News image

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Updated On :19 நவம்பர் 2020, 1:17 pm

DIN

அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றடைந்தார்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் முடிவுபெறாத நிலையில் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை காபூலுக்கு வந்தடைந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இம்ரான் கான் ஆப்கானிஸ்தானுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை அடுத்த ஆண்டின் ஜனவரி மாத மத்தியில் குறைப்பதாக அமெரிக்க அரசு அறிவித்த நிலையில் இம்ரான்கானின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

"பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான சகோதரத்துவ இருதரப்பு உறவுகள்,  அமைதிக்கான செயல்முறை மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்" என்று பாக்கிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் தாவா கான் மினபால், “இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். எனினும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.