ஜெர்மனியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு சாத்தியமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை வெளியிட்டார்.
இதன்மூலம் வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் பணியாளர்களை அவர்களது இல்லங்களில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 18,633 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 9 லட்சத்து 61 ஆயிரத்து 320 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 -கடகம்

விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மிதுனம்

அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


