மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆப்கன் ராணுவத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 34 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். 

News image
ஆப்கன் ராணுவத் தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்
Updated On :29 நவம்பர் 2020, 12:05 pm

DIN

ஆப்கானிஸ்தானில் கிழக்கு கஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். 

கஸ்னி ராணுவத் தளம் அருகே வெடிகுண்டு நிரம்பிய கார் வெடித்ததில் ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரி ஒருவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

கஸ்னி மாகாண சுகாதாரத் துறைத் தலைவர் ஜாஹிர் ஷா நிக்மலும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார். 

ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 வீரர்கள் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.