கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இதுவரை சுமார் 20 ஆயிரம் அமேசான் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு

கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 19,800 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

இதுவரை சுமார் 20 ஆயிரம் அமேசான் ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு

Updated On :2 அக்டோபர் 2020, 7:05 am


சான் பிரான்ஸிகோ: கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 19,800 ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்னணு வணிகத்தில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் 10 லட்சத்து 37 ஆயிரம் முன்களப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் அமெரிக்காவில் உள்ள உணவு பொருள் விற்பனைக் கூடங்களில் பணியாற்றும் ஊழியர்களில் எதிர்பாரத்ததை விடவும் குறைவானவர்களுக்கே கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் அமேசான் கூறியுள்ளது.

மேலும், கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதலே, கரோனா உறுதி செய்யப்படும் விவரங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு, ஒரு அலுவலகத்தில் ஊழியருக்கு கரோனா உறுதி செய்யப்படுவது குறித்து அங்கு பணியாற்றுவோருக்கு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அமேசான் கூறியுள்ளது.

உலகிலேயே கரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், அமேசான் நிறுவனம், கரோனா உறுதி செய்யப்படும் ஊழியர்களின் விவரங்களை அளிப்பது தொடர்பாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அமேசான் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.