ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கரோனா இறப்பு: பிரேசிலில் 1.45 லட்சத்தைக் கடந்தது

பிரேசிலில் நாளுக்குநாள் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சத்தைக் கடந்துள்ளது.

News image

Brazil tops 145,000 deaths from Coronavirus

Updated On :3 அக்டோபர் 2020, 8:00 am

பிரேசிலில் நாளுக்குநாள் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளால் பல்வேறு நாடுகள் ஸ்தம்பித்து வருகின்றன. நாளுக்குநாள் அதிகரித்துவரும் கரோனா இறப்புகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி பிரேசிலில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு.45 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 708 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1.45,388 ஆக உயர்ந்துள்ளது. 

பிரேசிலைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக கரோனா இறப்புகள் பதிவாகியுள்ள இரண்டாவது நாடாக உள்ளது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், 33,431 பேருக்கு புதிதாகத் தொற்றுப் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் மொத்த பாதிப்பு 4,88,0523 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ மாநிலம் தொற்றுநோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்த பாதிப்பு 9,97,333 ஆகவும், பலி எண்ணிக்கை 35,956 ஆகவும் உள்ளது. 

ரியோ டி ஜெனிரோ நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாநிலமாகும், இதில் 18,665 இறப்புகளும், அடுத்து சியாராவில் 9,047 இறப்புகளும் பதிவாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.