நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆப்கானிஸ்தானில் காரில் வெடிகுண்டு தாக்குதல்: 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் சனிக்கிழமை காரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2020, 10:22 am

DIN

ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் சனிக்கிழமை காரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கானிகில் மாவட்டத்தில் சனிக்கிழமை காரில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

நங்கர்ஹார் மாகாண செய்தித் தொடர்பாளர் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலியானதாகவும், ஆயுதங்களுடன் மாகாண ஆளுநர் வளாகத்திற்குள் நுழைய முயன்றவர்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.