வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவு

பப்புவா நியூ கினியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image

6.6 magnitude Earthquake jolts Papua New Guinea

Updated On :8 அக்டோபர் 2020, 9:36 am

ANI

பப்புவா நியூ கினியாவில் வியாழக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. பப்புவா நியூ கினியா பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள ரிங் ஆஃப் பயர்-இல் இதுபோன்று அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகின்றது. 

அந்தவகையில், இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி பப்புவா நியூ கினியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பையில் என்னுமிடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்க ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.