புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 3.63 கோடி: பலி 10.60 லட்சமாக உயர்வு

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்புக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,74,08,529 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2020, 3:19 am

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்புக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,74,08,529 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 3,63,91,057 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,74,08,529 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 79,25,088    பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 67,426 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 77,76,224 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,16,784 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொற்று பாதிப்பில்  இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1,05,554 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசில் (50,02,357), நான்காம் இடத்தில் ரஷியாவும் (12,48,619) உள்ளது. 

உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 148,304 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.