/

பிரேசிலில் 1.5 லட்சத்தை கடந்த கரோனா பலி

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.50 லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

பிரேசிலில் 1.5 லட்சத்தை கடந்த கரோனா பலி

Updated On :11 அக்டோபர் 2020, 11:50 am

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரேசிலில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,50,198-ஆக அதிகரித்துள்ளது.

எனினும் கடந்த மே மாதத்தோடு ஒப்பிடும்போது பிரேசிலில் தற்போது கரோனா கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. 

கடந்த 7 நாள்களில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 598-ஆக குறைந்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது கரோனா பலி எண்ணிக்கை குறைவாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனா தொற்றின் தீவிரத்தை உணராமல், தொற்றுப் பரவல் அதிகரித்து வந்த சூழலில் தளர்வுகளை அறிவித்ததன் எதிரொலியாக மீண்டும் கரோனா இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.