ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஜெர்மனியில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 7,830 பேருக்கு பாதிப்பு

ஜெர்மனியில் புதிதாக 7,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 அக்டோபர் 2020, 11:00 am

ஜெர்மனியில் புதிதாக 7,830 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராபர்ட் கோச் இன்ஸ்டியூட் வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,830 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,56,387ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 33 பேர் பலியானார்கள்.

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 9,767ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அண்மை தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதைத் தொடர்ந்து ஸ்பெயின், பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் மீண்டும் ஊரடங்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

உலகம் முழுவதும் 3.95 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.