சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

போலந்து அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

News image

போலந்து அதிபர் ஆண்ர்ரெஜ் துடா( கோப்புப்படம்)

Updated On :24 அக்டோபர் 2020, 10:07 am

போலந்து நாட்டின் அதிபர் ஆண்ர்ரெஜ் துடாவிற்கு சனிக்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போலந்து நாட்டு அதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமை அதிபர் துடா வார்சாவில் உள்ள தேசிய அரங்கத்தை ஆய்வு செய்திருந்தார். மேலும் இந்த மாதத் தொடக்கத்தில் பிரெஞ்சு ஓபன் வென்ற 19 வயதான போலந்து டென்னிஸ் வீரர் இகா ஸ்வெய்டெக்கையும் வெள்ளிக்கிழமை அவர் சந்தித்திருந்தார்.

அதிபர் துடா நலமுடன் இருப்பதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிபரின் செய்தித்தொடர்பாளர் பிளேஜெஜ் ஸ்பைச்சால்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போலந்தில் கரோனா தொற்றுநோயால் இதுவரை 4,172 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.