ராஜ்நாத் சிங் இன்று மாலை சீன பாதுகாப்பு அமைச்சரை சந்திக்க வாய்ப்பு
மாஸ்கோ சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாலை சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மாஸ்கோ சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மாலை சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷிய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் சொ்கேய் ஷொய்குவை சந்தித்து இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும், உள்நாட்டு ராணுவத் தயாரிப்பு குறித்தும் பேசினார்.
இதனிடையே அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வாங் யீ-யை இன்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - சீனா இடையே லடாக் கிழக்கு எல்லை விவகாரத்தில் கடந்த சிலமாதங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனிடையே எல்லை விவகார மோதல் போக்குக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தையாக இது கருதப்படுகிறது.
இதற்கு முன்பு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன பாதுகாப்புத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன பாதுகாப்புத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...