டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி  9.61 லட்சமாக உயர்வு

கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் எதுவும் வெளிவராத நிலையில், உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

வாஷிங்டன்: கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகள் எதுவும் வெளிவராத நிலையில், உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு 9,61,400 ஆக அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: 
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 3,09,83,958 ஆகவும், அதேநேரத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை 9,61,400 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 74,39,220 பேர் கரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2,25,83,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 61,386 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகளவில் கரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 69,67,433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,03,824 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தியா 53,98,230 தொற்று பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 86,774 அக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 45,28,347 பேரும், ரஷியாவில் 10,97,251 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.