சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தியா - இலங்கை இடையே இன்று காணொலி மாநாடு

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது.

News image
இந்தியா - இலங்கை இடையே இன்று காணொலி மாநாடு
Updated On :26 செப்டம்பர் 2020, 5:45 am

DIN

இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமர் மகிந்த ராஜபட்ச உடன் காணொலி காட்சி வாயிலாக இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் இரு நாட்டு உறவுகளை கட்டமைப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்பையும் அனைத்துத் தளங்களிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் இருநாட்டு பிரதமர்களுடன் அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிந்து முதன்முறையாக ராஜபட்ச இந்தியாவுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை பிரதமர் ராஜபட்ச இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு முதன்முறையாக அதிகாரப்பூர்வமான ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.