பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வைரஸால் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. பிரிட்டனிலும் கரோனா வைரஸ் வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வைரஸால் இங்கு சுமார் 48 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
உலகத் தலைவா்களில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், காணொலி மூலம் அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்தவரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


