தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் பலி

அமெரிக்காவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1200 பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :6 ஏப்ரல் 2020, 3:58 am

அமெரிக்காவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1200 பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணம் வூஹானில் பரவத்தொடங்கிய கரோனாவின் கோரத்தாண்டவத்துக்கு உலகம் முழுவதும் 216க்கும் மேற்பட்ட நாடுகளில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கியுள்ளது. 

இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சுமார்  336,673 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 1200 பலியாகி உள்ளனர். 

இத்துடன் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 9,618ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கவில் குறிப்பாக நியூயார்க் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டரை நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருவதால் சுகாதாரத்துறையினர் கலக்கத்தில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.