டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உலகளவில் கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டியது

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 4.39 லட்சமாக உயர்ந்துளள்து.

News image
Updated On :16 ஜூன் 2020, 10:34 am

DIN

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றுப் பாதித்தோர் எண்ணிக்கை 81 லட்சத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 4.39 லட்சமாக உயர்ந்துளள்து.

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும், அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தநிலையில் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

உலகம் முழுவதும் கரோனாவால் 81,18,671 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,39,198 பேர் மரணம் அடைந்துள்ளனர். 42,16,319 குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 21,82,950 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,18,283 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8,91,556 பேரும், ரஷ்யாவில் 5,37,210 பேரும் தொற்று நோய்க்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் 3,43,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,915 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.