அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தற்போது ஸ்பெயின் பிரதமரின் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2020, 4:23 am

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தற்போது ஸ்பெயின் பிரதமரின் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸின் மனைவி பெகோனா கோம்ஸ்க்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வரும் கோம்ஸ் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக ஸ்பெயின் அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று கனடா பிரதமரின் மனைவிக்கு அடுத்து தற்போது ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.