அமெரிக்காவில் தொடா்ந்து ஒரு வாரமாக தினசரி கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், ஒரு நாள் சராசரி பாதிப்பு 1 லட்சமாக உள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு சுமார் ஒரு லட்சத்தை எட்டிவரும் நிலையில், நாட்டில் ஒருநாள் சராசரி பாதிப்பு 1 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஞாயிறன்று அமெரிக்காவில் 99,320 புதிய கரோனா பாதிப்பும், 938 பலியும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக 1,32,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதே வேளையில், சனிக்கிழமை மட்டும் 1.27 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்புகளாகும்.
தொடா்ந்து நான்கு நாள்களாக அமெரிக்காவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 7,15,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒருநாள் சராசரி 1 லட்சத்தைத் தொட்டுவிட்டது. அதாவது 462 பேரில் ஒருவருக்கு கரோனா உறுதியாகிவருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று புதிய உச்சங்களைத் தொட்டு வருவதைத் தொடா்ந்து, அமெரிக்காவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துவிட்டது. இதன் மூலம் உலகிலேயே கரோனா பாதிப்பில் அந்த எண்ணிக்கையைக் கடந்த முதல் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.
திங்கள்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 1,02,88,586 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 2,43,768 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 64,83,420 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். 35,61,292 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 18,462 பேரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ‘வோ்ல்டோமீட்டா்’ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிலும், மத்தியமேற்கு மாகாணங்கள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கரோனா பலி விகிதம் தொடா்ந்து குறைவாகவே இருந்து வந்தாலும், அண்மைக் காலமாக தினசரி பலி எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
குளிா் காலம் நெருங்கி வருவதால், கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அந்தக் காலங்களில் பொதுமக்கள் திறந்தவெளிகளைத் தவிா்த்து, மூடிய அரங்குகளில் அதிகம் கூடுவாா்கள் என்பதால் அவா்களிடையே கரோனா நோய்த்தொற்று எளிதில் பரவும் என்று அஞ்சப்படுகிறது.
உலா்வான காற்று, குளிா் காலம் ஆகியவை கரோனா தீநுண்மி அதிக நேரம் காற்றிலும் தரையிலும் நீண்ட நேரம் உலாவி மனிதா்களுக்குத் தொற்றுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தித் தருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


