மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ஆப்கன் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் சமங்கன் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கட்டுமான சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2021, 6:09 pm IST

ஆப்கானிஸ்தான் நாட்டின் சமங்கன் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கட்டுமான சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தின் தாரா-இ-சூஃப் மாவட்டத்தில் ஷபாஷாக் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதி ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 3 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே சுரங்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற விபத்தில் 18 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.