மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சிறார் மரண தண்டனை: ஈரானைக் கண்டித்த ஐ.நா.

ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.​

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2021, 5:11 pm IST

ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

முகமது ஹசன் ரெஸாய் கடந்த 2007ஆம் ஆண்டில் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 17 வயதில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 30 வயதான ரெஸாய் 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி கொலைக் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவை  தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ரெஸாய் கடுமையான சித்ரவதைகள் மூலம் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிவித்த ஐ.நா. அவை, சிறாராக கைது செய்யப்பட்டவரை தூக்கு தண்டனைக்கு உட்படுத்தியது பன்னாட்டு மனித உரிமைக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு மட்டும் சிறார் வயதில் கைது செய்யப்பட்ட 4 பேர் இதுவரை ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் வரை ஈரானிய சிறைகளில் மரண தண்டனைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அவை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.