கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரிட்டன் நாடுகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதியவகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே பேசிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், அச்சுறுத்தும் வகையில் கரோனா தொற்று பரவி வருவதால் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
முன்னதாக 16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மேர்க்கெல் பிரிட்டனில் இருந்து பரவிய புதிய வகை கரோனா தொற்று ஜெர்மனியில் பரவியுள்ளதைத் தொடர்ந்து பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஜெர்மனியில் இதுவரை 18 லட்சத்து 14 ஆயிரத்து 565 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீா் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
அதிமுக விவகாரத்தில் என்ன முடிவு? பேரவைத் தலைவா் விளக்கம்

குதிரைப் பேர அரசியல்: முதல்வா் விஜய் தெளிவுப்படுத்த வேண்டும் - பிரேமலதா

சாந்தினி சௌக் கோயிலில் திருடிய இருவா் கைது: சிலை மற்றும் பித்தளைப் பொருள்கள் மீட்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

