பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து

பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின்  சேவைகள் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின் சேவைகள் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 5:29 pm IST

லண்டன்: பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின்  சேவைகள் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கரோனா வைரசானது தற்போது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த வைரசானது தற்போது மேலும் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின்  சேவைகள் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய கரோனா வைரசினை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு விதித்துள்ள தீவிர கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், தூதரக சேவைகளைக் கோருபவர்களுக்கு உண்டாகக் கூடிய வைரஸ் பாதிப்பினை தடுக்கும் பொருட்டும், பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகத்தின்  சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.