கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ரஷியாவில் கரோனா பாதிப்பு 33.55 லட்சமாக உயர்வு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 454 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜனவரி 2021, 4:08 pm IST

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 454 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 23,652 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 33,55,794 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,027 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 454 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 60,911 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 27,31,129 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,63,754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.