தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலி

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 10:26 am

பிரேசிலில் ஒரேநாளில் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளனர். 
உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். 
இதன்படி பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 3,869 பேர் பலியாகியுள்ளர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 3,21,515ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 90,638 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,27,48,747ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11.16 மில்லியன் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.