துணை அதிபர் இல்லத்தில் குடியேறினார் கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ துணை அதிபர் இல்லத்தில் குடியேறினார்.

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்று இரண்டு மாதங்களுக்குப் பின்னர் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ துணை அதிபர் இல்லத்தில் குடியேறினார்.
அமெரிக்காவின் கடற்படை ஆய்வகத்திற்கு அருகில் வாஷிங்டனின் மாசசூசெட்ஸ் அவென்யூவில் உள்ள அதிகாரப்பூர்வ துணை அதிபர் இல்லத்திற்கு தனது கணவர் டக் எம்ஹாஃப் உடன் கமலா ஹாரிஸ் புதன்கிழமை குடியேறினார்.
19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த துணை அதிபர் இல்லமும் வெள்ளை மாளிகை என்றே அழைக்கப்படுகிறது.
துணை அதிபர் இல்லத்தில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் கடந்த இரு மாதங்கள் கமலா ஹாரிஸ் பென்சில்வேனியா அவென்யூவில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேயர் ஹவுஸில் தற்காலிகமாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...