தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

‘பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு’

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஃபிராங்க் பலோனி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:24 pm

DIN

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு இன்றியமையாதது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா் ஃபிராங்க் பலோனி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக, காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியை சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் சிறப்புத் தூதா் ஜான் கெரி நேரில் சந்தித்து இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளாா்.

இது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகும்.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உலகின் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். அதிபா் பைடன் நடத்தவிருக்கும் புவி தின மாநாட்டில் இந்தியாவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும் என்றாா் அவா்.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது குறித்து உலக நாடுகளின் தலைவா்கள் விவாதிப்பதற்கான மாநாடு, காணொலி மூலம் வரும் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

அந்த மாநாட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதா் ஜான் கெரி தில்லியில் கடந்த புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.