இந்தோனேசியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவு
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மலாங் மாவட்டத்தின் சம்பர்புகுங் நகரிலிருந்து தெற்கே 44.8 கிலோமீட்டர் (27.8 மைல்) மையத்தில் 82 கிலோ மீட்டர் (50.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் பூகம்பம் மற்றும் சுனாமி மையத்தின் தலைவர் ரஹ்மத் ட்ரையோனா கூறுகையில்,
கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படும் வாய்ப்புகள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஏனெனில் மாகாணத்தின் சில பகுதிகளில் மக்கள் மிதமான நிலநடுக்கத்தை உணர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
அண்டை நகரமான மலாங்கின் பிளிட்டரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மேற்கூரை சேதடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி பூகம்பங்கள், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த ஜனவரியில் 6.2 ரிக்டரில் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 105 பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 6,500 பேர் காயமடைந்தனர். 92,000 பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...