தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நிலவில் தரையிறங்குவதற்கான நாசா விண்கலம்: உருவாக்குகிறது ஸ்பேஸ்-எக்ஸ்

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் தனது திட்டத்துக்காக, தரையிறங்கும் கலத்தை உருவாக்கும் பொறுப்பை தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா வழங்கியுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 8:36 pm

DIN

நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் தனது திட்டத்துக்காக, தரையிறங்கும் கலத்தை உருவாக்கும் பொறுப்பை தனியாா் நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா வழங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

வரும் 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்ப நாசா ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ், நிலவுக்கு முதல் முறையாக ஒரு பெண் விண்வெளி வீராங்களை செல்லவிருக்கிறாா்.

அந்தத் திட்டத்தின் கீழ், நிலவில் தரையிறங்குவதற்கான கலத்தை உருவாக்கும் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்க நாசா முடிவு செய்தது. 289 கோடி டாலா் (சுமாா் ரூ.21,542 கோடி) மதிப்புடைய இந்த ஒப்பந்ததுக்காக, அமேஸான் நிறுவனா் ஜெஃப்ரி பேஸோஸின் நிறுவனம், அலாபாமாவைச் சோ்ந்த டைனடிக்ஸ், எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய நிறுனங்கள் போட்டியிட்டன.

இதில் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

அந்த நிறுவனத்தின் ஸ்டாா்ஷிப் கலத்தை அடிப்படையாகக் கொண்டு நிலவில் தரையிறங்குவதற்கான கலம் வடிவமைக்கபடவுள்ளது. தற்போது தெற்கு டெக்ஸாக்ஸ் பகுதியில் ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் சோதித்துப் பாா்க்கப்பட்டு வருகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.