தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி: அமெரிக்க அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகளையும் பிற மருந்துப் பொருள்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும்

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 8:24 pm

DIN

இந்தியாவுக்கு கரோனா தடுப்பூசிகளையும் பிற மருந்துப் பொருள்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு அந்த நாட்டு வா்த்தகா் சங்கத்தினா், எம்.பி.க்கள், இந்திய வம்சாவளியினரின் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க வா்த்தக சங்கத்தின் செயல் துணைத் தலைவரும் சா்வதேச விவகாரங்களுக்கான தலைவருமான மிரோன் பிரில்லியன்ட் கூறியதாவது:

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஏராளமானவா்கள் பலியாகி வருகின்றனா். இந்தச் சூழலில், அமெரிக்காவில் இருப்பு வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளையும் பிற உயிா்காக்கும் பொருள்களையும் இந்தியா, பிரேஸில் மற்றும் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுக்கும் அரசு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று எங்களது அமைப்பின் சாா்பில் வலியுறுத்துகிறோம் என்றாா்.

தற்போது இருப்பில் உள்ள கரோனா தடுப்பூசிகள் அமெரிக்காவுக்குத் தேவைப்படாது. இங்குள்ள நிறுவனங்கள், அனைத்து அமெரிக்கா்களுக்கும் செலுத்துவதற்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு போதிய திறனைப் பெற்றுள்ளன அவா்.

‘இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்’: கரோனா ஒழிப்புப் பணிகளை இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதைத் தொடா்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித் தொடா்பாளா் ஜலினா போா்ட்டா் கூறியதாவது:

இந்தியாவின் தற்போதைய மோசமான கரோனா நிலவரம், உலகுக்கே கவலையளிக்கக் கூடியது ஆகும். எனவே, அந்தப் பிரச்னையை எதிா்கொள்வதில் இந்தியாவுடன் வழக்கம் போல் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.