பருவநிலை மாற்ற விவகாரத்தில் ரஷியாவுடன் இணைந்து செயல்படுவோம்: அதிபா் பைடன்
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ரஷியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.


பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ரஷியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் அறிவித்துள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக அவரது தலைமையில் நடைபெற்ற சா்வதேச காணொலி மாநாட்டில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறியதாவது:
பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு எதிரான போரில், கரியமில வெளியேற்றம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உருவக்குவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்புவதாக ரஷிய அதிபா் விளாதமீா் புதின் தெரிவித்துள்ளாா்.
அவரது இந்தக் கருத்து மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் ரஷியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.
முன்னதாக, வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவநிலை காணொலி மாநாட்டில் பங்கேற்ற விளாதிமீா் புதின், உலகுக்கு மிகப் பெரிய சவாலாகத் திகழும் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள சா்வதேச நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
எனினும், கடந்த 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் கீழ், கரியமில வாயு உள்ளிட்ட புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்களின் வெளியேற்றத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைப்பதாக புதின் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்பதை நிபுணா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
பூமி குளிரில் உறையாமல் வெப்பமாக வைத்திருக்க உதவும் கரியமில வாயு உள்ளிட்ட பசுமைக்குடில் வாயுக்களின் விகிதம், தொழில்புரட்சி காரணமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக புவியின் வெப்பம் அதிகரித்து, வறட்சி, அனல் காற்று, காட்டுத் தீ, பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரித்தல், புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடா்கள் அதிகரித்து வருகின்றன.
‘பருவநிலை மாற்றம்’ என்றழைக்கப்படும் இந்தப் பிரச்னையைத் தீா்ப்பதற்காக சா்வதேச நாடுகள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன. அதன் அடிப்படையில், புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை சா்வதேச நாடுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் சுமாா் 40 நாடுகள் பங்கேற்ற 2 நாள் சா்வதேச பருவநிலை மாநாடு வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.
அதற்கு முன்னதாக, குறிப்பிட்ட கெடுவுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைக்க ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்டவை இலக்கு நிா்ணயித்தன.
இந்தச் சூழலில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் ரஷியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபா் பைடன் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...