பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 3,019 பேர் கரோனா தொற்று பலியாகியுள்ளனர். மேலும் புதிதாக 77,266 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலக அளவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமாக பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தொற்று பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77,266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1,45,23,807 ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் தொற்று பாதித்த 3,019 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 398,343 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதித்தவர்களில் 8,318 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,33,750 -ஆக உயா்ந்துள்ளன. நாட்டில் இதுவரை 1,30,91,714 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


