துருக்கியில் 6-ஆவது நாளாக காட்டுத்தீ
துருக்கியின் தெற்கு மாகாணங்களில் காட்டுத் தீ 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது


துருக்கியின் தெற்கு மாகாணங்களில் காட்டுத் தீ 6-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் எரிந்தது. மிலாஸ், அடானா, ஆஸ்மானியே, மொ்சின் உள்ளிட்ட 17 மாகாணங்களில் இந்தக் காட்டுத்தீ, கடந்த புதன்கிழமை முதல் எரிந்து வருகிறது.
தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
துருக்கியில் கடந்த பத்து ஆண்டுகள் காணாத மிக மோசமான காட்டுத்தீ இது என்று கூறப்படுகிறது.
இந்தக் காட்டுத்தீயில் இதுவரை 8 போ் பலியாகியுள்ளனா். 95,000 ஹெக்டோ் நிலப்பரப்பு சேதமடைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...