2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பிரேசில் : கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1,056 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று மிக வேகமாக பரவி வருவதோடு  அதிக இழப்புகளையும் சந்தித்து வருகிறது.

News image
பிரேசில் : கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 1,056 பேர் பலி
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:47 am

DIN

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று மிகவேகமாக பரவி வருவதோடு  அதிக இழப்புகளையும் சந்தித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,056 பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம்  அலையின் தாக்கம் குறைவது போல் தெரிந்து தற்போது மீண்டும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால்  கட்டுக்கடங்காமல் பரவும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருக்கிறது.

இதுவரை அந்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் 2.08 கோடி எனவும் அதில் 5.62 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு பின் அதிக கரோனா பாதித்த நாடுகளில் ஒன்றாக பிரேசில் நீடிக்கிறது.

மேலும் அங்கு கரோனா முதல் தவணை தடுப்பூசியை 14.9 கோடி பேர் எடுத்திருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.